திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 304 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், குணசேகரன், அசோக் குமார், முருகேசன், ஒன்றிய பொருளாளர் சின்னராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ் ஒன்றிய குழு உறுப்பினர் லட்சுமி பூபதி, நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், அவைத்தலைவர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலையரசி பள்ளி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இந்திராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.