ஈரோடு கே. என்.கே. ரோட்டை சேர்ந்தவர் வள்ளியப்பன் ( வயது 63) இவர் கோவை டாடாபாத் 2 -வது வீதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.இவரிடம் விற்பனையாளராக ரத்தினபுரி ,மேஸ்திரி சாமிநாத கவுண்டர் வீதியைச் சேர்ந்த சாந்து முகமது (வயது 42 )என்பவர் வேலை பார்த்து வந்தார்.இவர் 1- 12- 20 22 முதல் 14- 5- 20 23 வரை வாடிக்கையாளரிடம் வசூல் செய்த பணம் ரூ.20 லட்சத்தை நிறுவனத்துக்கு செலுத்தாமல் மோசடி செய்து விட்டார் .இது குறித்து வள்ளியப்பன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து சாந்து முகமதுவை நேற்று கைது செய்தனர். இவர் மீது மோசடி உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ரு20 லட்சம் மோசடி – ஊழியர் கைது..!









