கம்யூனிசம் பரப்பினால் நான்கு ஆண்டு சிறை தண்டனை-இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து வரும் புதிய சட்டம்..!

ம்யூனிச சித்தாந்தத்தை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தோனேஷியாவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக் காதல் மற்றும் திருமண உறவை மீறிய உடலுறவு குற்றமாக பார்க்கப்படும். இதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இதன்பின், ஆறு மாதங்கள் சீர்திருத்த முகாமில் இருக்க வேண்டும்.

இந்த விதிமுறை இந்தோனேஷிய மக்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டவருக்கும் பொருந்தும். அதிபர், துணை அதிபர், அரசு அமைப்புகள், தேசிய சின்னங்களை அவமதித்தால், மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

மததுவேஷத்தில் ஈடுபட்டால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை. இதில் ஹிந்து, புத்தம், கன்பூசியம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட்,லெனினிஸ்ட் கொள்கையை பின்பற்றும் அமைப்புகளுடன் தொடர்புள்ளோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பரப்புவோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.