தலை வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது.!!

திருப்பூர்: திருப்பூரில் தலை வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் எம்.எஸ்.நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று காலை காவல்துறையினர் தலையை மீட்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அலங்காநல்லூர் ராம்குமார் (25), மதுரை மணிகண்டன்(25), சிவகங்கை சுபா பிரகாஷ் (23), திருப்பூர் சதீஷ்குமார் (24) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.