இன்று கோவை வருகிறார் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர்
செந்தில் கார்த்திகேயன் – கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின்
பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார்
ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான
எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து
விமானம் மூலம் இன்று மாலை கோவை வருகிறார். அவருக்கு கட்சியினர் வரவேற்பு
அளிக்கின்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம். எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்த சாமி, தாமோதரன், கே.ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி மற்றும் அ.தி.முக பிரமுகர்கள் உள்ளிட்டோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.