தமிழக அரசின் பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டதிருத்த மசோதா : ஜனாதிபதி ஒப்புதல்..!!

துடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தமசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.