கோவையில் பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர்: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது..!!

கோவையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 22) ஆட்டோ டிரைவர் ,இவர் கோவையைச் சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகினார்.பின்னர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஆனாலும் சந்தோஷ் குமார் விடவில்லை. அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது .இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தோஷ் குமார் அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது .உடனே சந்தோஷ் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை காதலிக்க வலியுறுத்தி தொந்தரவு செய்வது போக்சோ சட்டத்தில் பாலியல் தொல்லையின் கீழ் வருகிறது.எனவே தான் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.