கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது .பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் அவரின் உறவினருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .இதற்கு அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து படிக்க விரும்புவதாக கூறினார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி பெற்றோர்கள் , உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததனர். இது குறித்து கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைனில் புகார் செய்யப்பட்டது . இதை அறிந்த கோவை மாவட்ட சமுகநலத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் .இதில் அந்த மாணவிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு நடந்தது உறுதியானது. உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
Leave a Reply