பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி கட்டாய மத மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமதின்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், மதமாற்றம் தான் அறப்பணியின் நோக்கமா? என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து மாநிலங்களிடம் விளக்கம் பெற்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Leave a Reply