பிரதமர் மோடிக்கு பைடன் அளித்த விருந்தில் இடம்பிடித்த உணவுகள்.. என்னென்ன ஐட்டங்களோ..

வாஷிங்டன்: அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் இரவு விருந்து வழங்கினார். இந்த விருந்தில் சுவைமிக்க, வட மாநில மற்றும் ஐரோப்பிய புகழ்பெற்ற உணவுகள் இடம் பெற்றிருந்தன.
சில உணவு வகைகளில் அமெரிக்க, இந்திய தேசிய கொடி வண்ணமும் அலங்கரித்தன. இந்த விருந்தில் இடம்பெற்ற உணவு வகைகள் விவரம் வருமாறு: சத்து நிறைந்த திணையிலான பல்வேறு உணவு வகைகள், சிறுதானிய கேக்குகள், தர்பூசணி மற்றும் பச்சை காய்கறிகளுடனான சாலட், வெண்ணெய் சாஸ், டாங்கி அவகொடாசாஸ், ஐதராபாத் புகழ்பெற்ற உணவுகளும் இடம் பெற்றிருந்தன. காளான் மற்றும் சோளத்தினால் ஆன உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. அனைத்து உணவு வகைகளும் சைவமாகவே இருந்தன. வெள்ளை மாளிகையின் மூத்த சமையல் கலைஞர் கிரிஸ் காமர்போர்ட் இந்த உணவு வகைகள் குறித்து விவரித்தார். நவராத்திரி விரதம்பராக் ஒபாமா அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றபோது, ​​அவர் நவராத்தி விரதம் இருந்தார். இதனால் அவர் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே அருந்தினார்.