அவலாஞ்சி அணையில் மீன் குஞ்சுகள் விடும் பணி- தொடங்கி வைத்தார் கலெக்டர் அம்ரித்..!

நீலகிரி மாவட்டத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை, மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறிதாவது:- சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையின்படி, 20 ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் முட்டைகளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் அரசு ட்ரவுட் மீன் பண்ணையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அவலாஞ்சி அரசு டிரவுட் மீன் பண்யிைல் இருப்பு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 20ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் இருப்பு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் 20ஆயிரம் டிரவுட் மீன் முட்டைகளில், தற்போது 14ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகளில் முதற்கட்டமாக அவலாஞ்சி அணையில் 6ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2-வது கட்டமாக மீதமுள்ள டிரவுட் மீன்குஞ்சுகள் லக்கடி, மேல்பவானி, தேவர்பேட்டா மற்றும் எமரால்டு நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இருப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் தில்லைராஜன், ஊட்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் (கூ.பொ) முனைவர் கதிரேசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டத்தின் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு இருதய பரிசோதனை முகாமினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்பு இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறிதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஊட்டத்தினை உறுதிசெய் என்ற ஒரு சிறந்த திட்டத்தினை நமது மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அங்கன்வாடி மையங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பள்ளி சிறார் குழந்தைகள் நலதிட்ட குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் நமது மாவட்டத்திலுள்ள பொது சுகாதாரதுறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டத்தின் 8 குழுக்கள் மூலம் பிறந்த குழந்தைகளும், அங்கன்வாடி மையங்களிலும், பள்ளிகளிலும் பயில்கின்ற 19 வயது வரை உள்ள குழந்தைகளை பரி சோதனை செய்யப்பட்டதில் 237 குழந்தைகளுக்கு இருதய பிரச்சனைகளுக்கான அறிகு றிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இன்றைய தினம் சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய சிறப்பு நிபுணர் இக்குழந்தைகளுக்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் எக்கோ பரிசோதனை மூலம் இருதய பிரச்சனைகள் உறுதி செய்யப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். எனவே, இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இம்முகாமில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் முத்துக்குமரன், சரண்யா, குழந்தைகள் நல மருத்துவர்கள் உமாதேவி, நளினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.