தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:
“முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை. முகக்கவத்திற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம்தான்.
மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் குழுவினர், அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் வேண்டுமென்றே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
Leave a Reply