பிரதமர் மோடியை கொல்ல சதிதிட்டம் அம்பலம்.. குழந்தை அழுததால் எரிச்சலில் பாடம் புகட்ட செய்ததாக வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம் ..!

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யவும், புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதாக சதி திட்டம் தீட்டப்படுவதாக புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த அதிர்ச்சி புகாரினை அடுத்து புனே போலீசார் பரபரப்பு அடைந்தார்கள். சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புச் சென்று தீவிர ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னர் அந்த புகார் அழைப்பு வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மேலும் இதை அடுத்து அந்த புகாரை கொடுத்தவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 38 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் என்பவர் தான் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

விசாரணையில் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்த அவர் அடுக்குமாடி குடியிருப்பு மேலே உள்ள பிளாட்டில் குழந்தை அழுததால் எரிச்சல் தாங்க முடியாமல் அங்கு இருப்பவர்களுக்கு தனது எரிச்சலை சொல்ல பாடம் புகட்ட இப்படி செய்ததாக சொல்லி இருக்கிறார்.

போலீசார் அந்த வாலிபரை கைது செய்யும் போது கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்ட அந்த வாலிபர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.