பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க உதவும் என்சைம்- விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு.!!

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இயற்கை அடிப்படையில் தீர்வு காண விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஒரு முறை பயன்படும் குடிநீர் பாட்டில்கள், ஆடைகள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பிஇடி வகையின் டிபிஏ வகை பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க உதவும் என்சைமை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவைச் சேர்ந்த ‘புரொசீடிங் ஆஃப் த நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸில்’ வெளியானது.

இந்த ஆராய்ச்சியை மொன்டானா ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜென் டுபோய்ஸ், போர்ஸ்ட்மவுத் பல்கலைக்கழக பேராசியர் ஜான் மெக்கீகன் ஆகியோர் மேற்கொண்டனர்.

ஜான் மெக்கீகன் கடந்த 2018 இல் பிஇடி பிளாஸ்டிக்கை அழிப்பதற்கான என்சைமை தயாரித்த சர்வதேச குழுவுக்கு தலைமை வகித்தவர் ஆவார். தற்போதைய ஆராய்ச்சியின்படி, பிஇடி குடும்பத்தைச் சேர்ந்த டிபிஏவை அழிக்கும் என்சைம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேராசியர் டுபோய்ஸ் கூறுகையில், ‘ஈஜி என்பது ஒரு இராசயனம். இதை காரில் போட்டு வைத்துக் கொள்வோம். உறைதலைத் தடுப்பதில் இந்த இரசாயனம் முக்கியப் பங்காற்றுகிறது. பிஇடிக்கு வெளஇப்புறம் இருக்கும் டிபிஏ அதிக பயன்பாடுகளை கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான பாக்டீரியாக்கள் இவற்றை தின்று விடும். பிஇடியை தின்னும் பாக்டீரியாக்களிலிருந்து எடுக்கப்பட்ட என்சைம் டிபிஏவை அழிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர் டிபிஏடிஓ என்று வைத்திருக்கிறோம் என்றார்.

ஒவ்வொரு ஆண்டு 400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டிபிஏடிஓ எனும் என்சைம்கள் மூலம், பிளாஸ்டிக் கிழிவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். வீணாகும் பிளாஸ்டிக்குகளை வேறொரு பயனுள்ள பொருட்களாகவும் மாற்ற முடியும்.

பேராசிரியர் மெக்கீகன் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக எங்கள் கண்டுபிடிப்பில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீணாகும் பிளாஸ்டிக்கிலிருந்து உபயோகமான உலோகங்கள், தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றார்.