தெலங்கானாவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென பற்றி எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இதற்காக பேருந்தின் பேட்டரி சார்ஜிங் பாய்ன்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்து எரியத் தொடங்கியது. தகலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply