ஸ்கூட்டர் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி ..

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது71)இவர் நேற்று வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கோவிந்தராஜன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார் .இது குறித்து அவரது மகன் கார்த்திகேயன் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த கணபதி ஆவராம்பாளையத்தை சேர்ந்த ஆறுச் சாமி (வயது 45 )என்பவர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.