இந்தியாவில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

டெல்லி : இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று தொடங்கப்பட இருக்கிறது.

முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லியில் வழங்கப்பட இருக்கிறது.

இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வையும் இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று இந்தியன் மொபைல் காங்கிரஸ் (ஐ.எம்.சி) நிகழ்வை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு இன்று முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று தொடங்குகிறது.

5ஜி நெட்வொர்க் சேவை முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டதும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது எனக் கூறப்படுகிறது. டெல்லியில் 5ஜி டவர்களை அமைப்பதற்காக நகர் முழுவதும் 10,000 இடங்களை பொதுப்பணித்துறை கண்டறிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி வெளியீடு பற்றி, அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ள டெலிகாம் நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை இயக்க முடியும். இந்தியாவில் 5ஜி சேவை தொடங்குவதால், இந்த பண்டிகை காலத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.