அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய சத்தியமங்கல தொண்டர்கள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதை கொண்டாடும் விதமாக புஞ்சைபுளியம்பட்டியில் பவானிசாகர் தெற்கு ஒன்றிய அதிமுக மற்றும் புஞ்சைபுளியம்பட்டி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புஞ்சை புளியம்பட்டி நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் சத்தியமங்கலம் நகர அதிமுக சத்தியமங்கலம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகர செயலாளர் சுப்பிரமணியம், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரப்பன், ஈரோடு மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், முன்னாள் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, கொமரபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன்  உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..