கார் கதவு பட்டு மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையில் காயம்..!

கோவை :அதிமுக முன்னாள் அமைச்சரும், கொரோடாவுமான எஸ் பி வேலுமணி நேற்று கோவை குனியமுத்தூரில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் வெளியே சென்றார். அப்போது வெளியே சென்ற இடத்தில் காரை விட்டு இறங்கி , சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காரை ரிவர்ஸ் எடுக்கும் போது காரின் கதவு எதிர்பாரத விதமாக எஸ் பி வேலுமணியின் கை மீது பட்டது .இதில் அவருக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அவரது கையில் கட்டு போடப்பட்டுள்ளது.அவர் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.