உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி பொது விடுமுறை- சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த தகவல் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.