மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறங்கிய பெங்களூரு விமானம்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலை லக்னோவில் இருந்து விமானம் பெங்களூருக்கு புறப்பட்டு வந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக பெங்களூருவில் வானிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதனால் விமானம் பெங்களூருவில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கோவையில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. கோவையில் மழை பெய்த போதிலும் அந்த விமானம் கோவையில் தரையிறங்கியது. பின்னர் கோவையில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த விமானம் மீண்டும் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.

கோவையில் மழை பெய்த போதிலும் கோவை விமான நிலையத்தில் வழக்கம் போல் விமானங்கள் தரையிறங்கி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.