அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் மனு அளித்தார்.
ஆனால், ஓபிஎஸ்-ன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மீண்டும் தலைமை நீதிபதி இடம், நீதிபதியை மாற்றக் கோரி முறையிட்டார்.
இந்த நிலையில்,நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.
இதனை தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுகவின் பொதுக்குழு வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்ற கோரி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு வழக்கை தனி நீதிபதி ஜி ஜெயசந்திரன் விசாரணை செய்வார் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். வழக்கு இன்று முதல் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது