குழந்தை கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம் – திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பேட்டி.!!

திருச்சியில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது
சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் யாரேனும் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல் துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 82 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தல் அதிகாரிகள் காவலர்கள் துணையுடன் மிகச் சிறப்பாக நடக்கும் என்றார்.