வால்பாறை நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது.!!

தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளில் திமுக போட்டியிட்டது. இந்தநிலையில் வால்பாறை நகராட்சியில் திமுக போட்டியிட்ட 17 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இரண்டு வார்டுகளில் கூட்டணி கட்சிகளும், ஒரு வார்டில் அதிமுகவும், ஒரு வார்டில் சுயேட்சையும் கைப்பற்றியது.