சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து தயாராகும் பக்தர்கள்…

சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து தயாராகும் பக்தர்கள்…

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி பக்தர்கள் விரதம் இருந்து யாத்திரை செல்ல ஆயிரக்கணக்கான இன்று கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

அன்பும், அருளும் பணிவான சாஸ்தா சபரிமலை வாழும் ஐயப்பன் அருள் பெற கார்த்திகை மாதம் உகந்ததாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதத்திற்கு பிறகு எரிமேலி பேட்டை துள்ளி, பம்பை ஆற்றில் புனித நீராடி மலை மீது ஏறி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் இன்று மாலை அணிந்துள்ளனர்.

ஐயப்பன், விநாயகர் டாலர்களுடன் துளசி மாலை, ருத்ராட்ச மாலை முதல் நாள் இரவே தயார் செய்து. அதனை பாலில் ஊற வைத்து, கார்த்திகை முதல் நாள் இன்று ஏதாவது ஒரு கோவில் குருசாமியின் அருளுடன் மாலை அணிந்து கொள்ளவார்கள் முதல் முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் குருசாமி இன்றி மாலை அணியக் கூடாது அப்பொழுது தான் ஐயப்பனுக்கு என்னென்ன விரத முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்கள் எடுத்துக் கூறுவார்கள்.

மாலை அணிந்ததில் இருந்து மனதில் தீய எண்ணங்கள் முற்றிலுமாக விலக்கி மாலை அணிந்த பக்தர்கள் மது, மாது, புகை, மாமிசம் உள்ளிட்ட தீய பழக்கங்கள் அனைத்தையும் முற்றாக துறந்து விட வேண்டும் என்றும் மேலும் பூ புனித நீராட்டு விழா, தூக்க நிகழ்வு போன்ற வீடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் அதிகாலை மாலை இரு வேலைகளையும் குளித்து வீட்டில் இருக்கும் ஐயப்பன் புகைப்படத்திற்கு பூஜை செய்வது அவசியம் என்றும் 3 நேரங்கள் உணவு எடுத்துக் கொண்டாலும் கட்டுப்பாடுகளுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் முதல் முறை மாலை அணியும் பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிய வேண்டும் அதன் பிறகு குருசாமி நிலையை அடைந்தால் பச்சை, நீள வண்ண ஆடைகள் அணிந்து கொள்ளலாம் என்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.