100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்…

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்…

கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் அதனால் கோவிலை இடிக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தனர் இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கோவில் சார்பாக யாரும் ஆஜராகாததால் வழக்கு தீர்ப்பு அடுக்குமாடி குடியிருப்போருக்கு சாதகமானது. இதனால் இன்று அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த கோவிலை இடிக்க ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்த போது அங்கு பக்தர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது கோவிலுக்கு சொந்தமான இடத்தை அடுக்குமாடி குடியிருப்போருக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களை கண்டித்து இந்து அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது