கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : சி.சி.டி.வி காட்சிகள் பதிவான 4 பேர் யார்? – காவல் துறை விசாரணை

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : சி.சி.டி.வி காட்சிகள் பதிவான 4 பேர் யார்? – காவல் துறை விசாரணை

கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிகாலை 4 மணி அளவில் கார் செல்வதும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நிற்பதும் சிறிது நேரத்தில் கார் வெடிப்பதும் , பொருட்கள் சிதறி விழுவதும் போன்ற காட்சிகளும், சில வினாடிகளில் அந்த இடத்தில் பொது மக்கள் கூடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.