ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் கட்டிய கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் கட்டிய கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

கோவைபுதூர் பகுதியில் ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் மூலமாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் கோவைப்புதூர் மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் ஒரு சில பகுதிகளில் அனுமதி இல்லாமல் வீடுகள் கட்டப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் குறிப்பாக ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கோவை மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் வீடு கட்டும் தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது