தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் அறிவிப்பு.!!

இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்து வார இறுதி நாட்களில் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்துள்ளது என்றும் வரும் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.