சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைப்பு.!!

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு என அதிகாரபூர்வ அறிவிப்பு.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த 19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விளையாட்டு போட்டியை ஒத்திவைப்பதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்போது கொரோனா எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், சற்று குறைந்த நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையிலும், சீனாவும் செப்டம்பரில் நடக்கவிருந்த ஆசிய விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.