தொடர் மழை எதிரொலி… வேகமாக உயரும் கோவை அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் மகிழ்ச்சி ..!!

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 134.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4036 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 843.46 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பரம்பிகுளம் அணையின் மொத்த நீர்மட்டம் 72 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 48.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1769 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 127 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறு அணையின் மொத்த நீர்மட்டம்120 அடி தற்போது அணையின் நீர் மட்டம்90.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 775 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 83,53அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4243 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 1,130 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லாறில் 117, சின்கோனா 92, வால்பாறை பி.ஏ.பி. 77, வால்பாறை தாலுகா 75, சேலையாறு 72, பொள்ளாச்சி 15, ஆழியாறு 5 , வேளாண்மை பல்கலை கழகம் 5, கோவை தெற்கு 3, விமான நிலையம் 1 என மாவட்டம் முழுவதும் 462 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.