குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று ஓவஹாக்கா என்ற மாநிலத்தில் ஹெர்பெர் கோபஸின் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்குபெற்றனர். இந்நிலையில் அண்மையில் 3 செய்தியாளர்கள் அடுத்தடுத்து மெக்சிகோவில் கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Leave a Reply