முதலமைச்சர்களின் சந்திப்பு கூட்டம்: விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்..!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முதல்வராக மம்தா செயல்பட்டு வருகிறார்.

இவருக்கும் மேற்கு வாங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதிவேற்ற நிகழ்ச்சியிலேயே ஆளுநரின் சில கருத்துக்கள் இவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் பலவித கருது வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து ஆளுநர் ஜகதீப் தன்கர் தன்னை பற்றியும், அதிகாரிகள் பற்றியும் தேவையில்லாத செய்திகள் ட்விட்டரில் வெளியிடுகிறார் என்று கூறி முதலவர் மம்தா பானர்ஜி, அவரது ட்விட்டர் கணக்கில் ஆளுநர் ஜகதீப் தன்கரை பிளாக் செய்தார். தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் சில பிரச்சனைகள் இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மாநில அரசின் ஒப்புதலோடு சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து ஆளுநர் முடக்கினார். தற்போது இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அன்புக்குரிய சகோதரி மமதா பானர்ஜி அவர்கள் என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளைப் பற்றியும், அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தும் போக்கைப் பற்றியும், தனது கவலையையும், ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடி சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்ற கழகத்துக்குள்ள உறுதிப்பாட்டை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்பு கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.