காங்கிரஸ் கட்சி மூழ்கிய கப்பல்: ராகுலின் பாதயாத்திரை எந்த பயனையும் தராது – வானதி சீனிவாசன் விமர்சனம்..!

கோவை: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் சரி எந்த பயனையும் தராது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்த பாத யாத்திரையை ராகுல் தொடங்கியிருக்கிறார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரை மொத்தம் 3,500 கி.மீ தூரம் 150 நாள்களில் நடந்து சென்றடைகிறார்.

ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தை பாஜகவின் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவையில், தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் காங்கிரஸ் கட்சி பற்றியும், ராகுல் காந்தி பற்றியும் கருத்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்திரி ரகுராம் மற்றும் வானதி சீனிவாசன் இணைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.

கைத்தறி ஆடைகளை அணிந்து மேடையில் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தின் கோவை மாநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் சரி எந்த பயனையும் தராது என்று தெரிவித்தார்.

கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரூட்ட முடியுமா? என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பாஜகவிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். கட்சியைக் மீட்க, ராகுல் காந்தியின் இந்த பலபரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் ராகுல் காந்தி நடந்தாலும் சரி ,ஓடிபோனாலும் சரி ,மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

காலம் கெட்டபிறகு சூர்யநமஸ்காரம் செய்வது போல ராகுல் காந்தியின் நடைபயணம், ராகுல் காந்தியின் உடல்  நலத்திற்க்கு நல்லதாக இருக்கலாம். நாட்டிற்க்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயணில்லை என்றும் மேலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் பொது மேடையிலே அவர்களின் தலைவர்களை வைத்து கொண்டு அநாகரிகமாக பேசும் கலச்சாரத்தை கொண்டு வந்ததே அவர்கள் தான்.

மாடல் மாடல் என்று சொல்கிறார்கள் அது தான் இந்த புதுமாடல் என கோவை மாநகராட்சியின் 70 வார்டில் இருவர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டபட்டுள்ள கழிப்பறை குறித்து விமர்சனம் செய்த வானதி சீனிவாசன் கழிப்பறை கட்டுவதில் கூட திராவிட மாடல் என்று மக்கள் பேசட்டும். எனவும் இந்த கழிப்பறை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்கதான் போகிறோம் என்றும் இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கம், மக்களை பற்றி கவலைபடாமல் தங்களது காண்ராக்டர்களை பற்றி கவலைபடுகிறார்கள் என்பது தெளிவாக  அவர் கூறினார்.