பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை , இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும், பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து , ஜி.ஆர்.ஜி விளையாட்டு அரங்கில் தொழில்முறை நிபுணர்களின் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் புகழ்பெற்ற தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் முன்னாள் மாணவர் தொழில் வல்லுநர்கள் , தங்களின் நிபுணத்துவத்தை வணிகவியல் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டு , கல்விசார் கருத்துக்களை சமகால தொழில்முறைச் சூழலுடன் ஒருங்கிணைப்பதற்கு ஒரு மதிப்புமிக்க தளமாக அமைகிறது . இந்த மாநாட்டில் வணிகவியல் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3000 மாணவர்கள் , தொழில்முறைத் தகுதி பெற்ற 200 முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்முறைப் படிப்புகளைப் பயிலும் 350 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் டாக்டர் நா . யசோதா தேவி வரவேற்புரை வழங்கினார். கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி .பரத் , ஐ.ஆர்.எஸ் . சிறப்புரையாற்றி விழாவிற்குத் தலைமை தாங்கினார்.ஐஏஐ -யின் எஸ்ஐஆர்சி மண்டலக் குழு உறுப்பினர் சிஏ.எஸ் ராஜேஷ், ஐசிஏஐ கோவை கிளையின் தலைவர் சிஏ ஆர் . சதீஷ், ஐசிஎஸ்ஐ கோயம்புத்தூர் கிளையின் தலைவர் சிஎஸ்சி சகுந்தலா, ஐசிஎம்ஏஐ கோயம்புத்தூர் கிளையின் தலைவர் சிஎம்ஏ சி மகேஸ்வரன் மற்றும் கர்நாடகாவின் பெங்களுருவில் உள்ள குளோபல் எஃப்டிஐ நிறுவனர் சிஏ நாராயணன் நம்பியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.CA , CS , CMA , ACCA , CPA மற்றும் CFA போன்ற புகழ்பெற்ற தொழில்முறைப் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 95 முன்னாள் மாணவர்கள், அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.முன்னாள் மாணவர் வல்லுநர்களின் நிபுணத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக , ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியும்
ஏற்பாடு செய்யப்பட்டது.இறுதியில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.பி. ஹாரத்தி நன்றியுரை ஆற்றினார்.







