கல்லூரி மாணவ-மாணவிகள் பொங்கல் கொண்டாட்டம் !

கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். தமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக, மண் பானையில், பச்சரிசி, வெள்ளமிட்டு, கரும்பு நட்டு, உற்சாகமாக பொங்கல் வைத்தனர்.

 

வண்ண வண்ண கலர் பொடிகளை பயன்படுத்தி, வண்ணமயமாக கோலமிட்டு அசத்தினர். கரும்பு கடித்து, பொங்கல் உண்டு, ஒருவருக்கொருவர் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.

இந்திய அரசின் நெசவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த கல்லூரியில், இந்தியா முழுவதிலிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இங்கே பயின்று வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் குறித்தும், பொங்கல் வைப்பதன் அவசியம் குறித்தும், அவர்களுக்கு விளக்கப்பட்டது.மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.