கோவை ஸ்வீட் கடையில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை..!

கோவை பீளமேடு ஹோப் காலேஜ் ஸ்ரீநகர்,காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 47 ) இவர் பீளமேட்டில் அவிநாசி ரோட்டில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் கண்ணப்பன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாபெட்டியில் இருந்த ரூ. 76 ஆயிரத்து 760 -ஐ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து நாகராஜ் பிளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தபோது அதில் ஒரு நபர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.