கோவை தனியார் மருத்துவமனை நர்ஸ் எங்கோ மாயம்..!

கோவை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பக்கம் உள்ள மேல நம்பியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்’ இவரது மகள் சித்ரா (வயது 24) இவர் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக மருத்துவமனையில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தாயார் கன்னியம்மாள் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.