கோவை தனியார் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் திருட்டு..!

கோவை கணபதி பாரதி நகர் எப்.சி.ஐ ரோட்டில் ” சி. எம். சி .கேஸ் ரீப்ளேஸ்மென்ட் இன்போ .சிஸ்டெம் ” என்ற தனியார் நிறுவனம் உள்ளது. கடந்த 3 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் இருந்த பணப்பெட்டியை திடீரென்று காணவில்லை .அதில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் அன்பரசு ( வயது 43) சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..