லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலயான சோகம்..

வேலூர் மாவட்டம் கீழ் வைத்தினாங்குப்பம் கீழ் ஆலத்தூர் கிராமம் கங்கை அம்மன் நகர் 2 வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஐயப்பன். இவரது மகன் திவேஷ் வயது 19 மாற்றுத்திறனாளி இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாறு பிரிவில் பயின்று வருகிறார் இவருடன் சேர்த்து 12 பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெட்டியில் சென்னையில் இருந்து கிருஷ்ணராஜபுரம் வரை மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்து வந்தவர்கள் லத்தேரி ரயில் நிலையம் அருகே திவேஷ் வயது 19. நுழைவு வாயில் அருகே படிக்கட்டில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் இறந்து போன திவேஷின் தந்தை ஐயப்பன் பிரேதத்தை அடையாளம் காட்டி புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கே. ஜெயக்குமார் வழக்கு பதிந்து தி வேசின் பிரேதத்தை கைப்பற்றி குடியாத்தம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.கல்லூரி மாணவர்கள் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் என்பதை அடியோடு மறந்து கர்வத்தில் ஓடும் ரயிலில் தவறி விழுந்து இறந்து போன சம்பவம் அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது