பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம
கோவை வெறைட்டி ஹால் ரோடு காவலர் குடியிருப்பத்தைச் சேர்ந்த அருளானந்தம் இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார் கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை காந்திமா நகர் பகுதி சேர்ந்த பாலமுருகன் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து அருளானந்தம் விசாரணை நடத்தினார். உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து பாலமுருகனின் உடலை ஒப்படைக்கும் பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருளானந்தம் இருந்தார். இதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கான செலவு 4,000 ரூபாயாகும் என்றும் அவருக்கு ரூபாய் 2000 என்றும் கூறி லஞ்சம் பெற்றார். இதனை ஒருவர் செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். லஞ்சம் வாங்கியது தொடர்பாக வீடியோவை பார்வையிட்டு துணை கமிஷனர் சிலம்பரசன் விசாரணை நடத்தினார். விசாரணை தொடர்ந்து அருளானந்தத்தை பணியிட நீக்கம் செய்து துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனை என்ற பெயரில் லஞ்சம் வசூலித்ததால் போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
Leave a Reply