கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, கணபதி கார்டனை சேர்ந்தவர் கற்குவேல் அய்யனார், இவர் துபாயில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமா. இவர்களின் மகன் ஹரிஹரன் ( வயது 21) இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .தற்போது அந்த நாட்டுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியதால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படித்து வந்தார் .இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று படிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்குமாறு ஹரிஹரனிடம் அவரது தாய் ஹேமா கூறியதாக தெரிகிறது .ஆனால் ஹரிஹரன் வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் மனமுடைந்த ஹரிஹரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மருத்துவ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை..
