கோவை – திண்டுக்கல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்..!

கோவை – திண்டுக்கல் பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில் பயணிகள் சங்கங்கள், ரெயில் பயணிகள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று வருகின்ற 13-ந் முதல் 18-ந் வரை கோவை – திண்டுக்கல், திண்டுக்கல்-கோவை வழியாக பொங்கல் விழாக்கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது . இந்த ரெயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த விழாகால சிறப்பு ரெயிலை பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.