கோவை ரேஸ் கோர்சில் சி.எஸ்.ஐ . மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று சுதந்திர தினகொடியேற்று விழா நடந்தது. அருண் திலகம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கூட்டுக் கல்விக் குழு கன்வீனர் டி. ஜெபசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிஎஸ்ஐ கோவை வட்டகை தலைவர் அருட்திரு ஏ.ஜே. ராஜா மாணவ – மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவர்களின் யோகா, நடனம், மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வேடம் அணிந்து பல்வேறு தியாகங்களை நடித்துக் காட்டினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் டாக்டர். குளோரி லதா டேவிட், துணை முதல்வர் இன்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர்..
Leave a Reply