கோயமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்.!!

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் கோயமுத்தூர் மக்களவைத் தொகுதிக்கு கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் அறிமுக கூட்டமானது கோவை சித்ரா காளப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது . இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  அறிமுகம் செய்து அனைத்து கட்சிகளும் தோழமை உணர்வோடு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்கின்ற வகையில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உதய சூரியன் சின்னத்தில் பொதுமக்களை சந்தித்து கடந்த இரண்டரை ஆண்டு காலம் திமுக அரசின் நலத் திட்டங்களை எடுத்து கூறி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளரை அறிமுகம் செய்து உரையாற்றினர். இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆயத்திருத்துறை அமைச்சர்  முத்துச்சாமி  தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி.பி.ராஜா  அமைச்சர்  செய்தி தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன்  மக்களவை உறுப்பினர் பி ஆர் நடராஜன் காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் உட்பட கூட்டணி தலைவர்கள் கழக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்..