தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை செயலிழப்பு – நிறுவன மேலாளர் கைது..!

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மென்பொருளை தனியார் நிறுவனம் செயலிழப்பு செய்ததால் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேபிள் டிவி செட்டப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்துள்ளனர். செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறுவன மேலாளர் ராஜனை கைது செய்துள்ளனர்.