கோவை சாயிபாபா காலனி பக்கமுள்ள கோவில் மேடு, திலகர் விதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் அவரது மகள் திரிஷா ( வயது 19) இவர் கிரிநகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வேலைக்கு செல்லவில்லை. வீடும் திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது .இது குறித்து அவரது தந்தை மைக்கேல்ராஜ் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..
கோவையில் பியூட்டி பார்லர் பெண் ஊழியர் திடீர் மாயம்..!









