சேவல் சண்டை சூதாட்டம். 5 பேர் கைது.

கோவை மே 2 கோவை மாவட்டம் பொள்ளாச்சிஅருகே உள்ள புவனேஸ்வரி நகரில் நேற்று சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியாராக ஆனைமலை அரசூர் மனோஜ் குமார் (23) கம்பாளப்பட்டி கிருபாகரன் (24) நாயக்கன்பாளையம் கார்த்திக் (28) வெள்ளே கவுண்டன் புதூர் மணிகண்டன் ( 19 )ஆனைமலை கம்மாளப்பட்டி ரஞ்சித், ( 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 சேவல்களும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.