கோவை வழியாக செல்லும் கொச்சி ரயில் சேவை நிறுத்தம்..!

கோவை:
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும்
வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே
கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப்
பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கொச்சி – கோா்பா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22648) நாளை (1-ந் தேதி) மற்றும் 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. கோா்பா – கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில் ( எண்: 22647) செப்டம்பா் 3 மற்றும் 7-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.