12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை மேலும் இருவர் கைது

12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை மேலும் இருவர் கைது

கோவை கோட்டை மேடு பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்களையும் விடக் கூடாது என எழுதி இருந்தார். கடிதத்தை கைப் பற்றிய போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மாணவி கடிதத்தில் எழுதி வைத்திருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் .அதில் ஒருவர் மாணவியின் வீட்டில் அருகில் வசித்த சுல்தான் என்பதும், மற்றொருவர் மாணவியின் உடன் படித்த சக மாணவியின் தந்தை மோகன்ராஜ் என்பதும் இவர்கள் இருவரும் மாணவியை பாலியல் சீண்டல் செய்து இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.